நெல்லையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
வனப்பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு அனுமதி வழங்கக்கோரி நெல்லையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கால்நடைகளை பாதுகாக்கவும், வனப்பகுதிகளில் கால்நடை மேய்ச்சலுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாயகிருஷ்ணன், பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் முகமது அலி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் சுடலைராஜ், ஆடு மாடு வளர்ப்போர் சங்க நிர்வாகிகள் பேச்சி, பண்டாரம், பால்துரை உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். மாநகராட்சி கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன், கங்கைகொண்டான் ஊராட்சி துணைத்தலைவர் நம்பி, கவுன்சிலர் உச்சிமாகாளி, ராஜபதி பரமசிவன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அருணாசலம் உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story