சாலை தடுப்பு சுவரில் மோதிய கன்டெய்னர் லாரி
நெல்லையில் சாலை தடுப்பு சுவரில் ேமாதி கன்டெய்னர் லாரி விபத்துக்குள்ளானது.
நெல்லை:
தூத்துக்குடியில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு கன்டெய்னர் லாரி புறப்பட்டது. அந்த லாரியானது நேற்று அதிகாலையில் பாளையங்கோட்டை கோர்ட்டு அருகே சென்றபோது திடீரென்று நிலைதடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதேபோல் நேற்று காலையில் நெல்லை டவுன் நயினார்குளம் சாலையில் சென்ற அரசு பஸ், அந்த வழியாக சென்ற கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்துகள் குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story