4 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


4 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 29 April 2022 2:04 AM IST (Updated: 29 April 2022 2:04 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கஞ்சா விற்ற வழக்கில் கைதான 4 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை:
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி பகுதியை சேர்ந்தவர்கள் சங்கரபாண்டி (வயது 27), மணிகண்டன் (23), பேட்டை பகுதியை சேர்ந்தவர் கூடலிங்கம் என்ற விஜய் (24), திருப்பணி கரிசல்குளம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து (23). இவர்கள் 4 பேரும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்த வழக்கில் பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 

இந்த நிலையில் சங்கரபாண்டி உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடும்படி, நெல்லை மாநகர மேற்கு துணை போலீஸ் கமிஷனர் கே.சுரேஷ்குமார், டவுன் சரக உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமாருக்கு பரிந்துரை செய்தனர். போலீஸ் கமிஷனர் அதனை ஏற்று சங்கரபாண்டி உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன், பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தார்.

Next Story