ஒன்றியக்குழு தலைவராக புவனேஸ்வரி பதவி ஏற்பு


ஒன்றியக்குழு தலைவராக புவனேஸ்வரி பதவி ஏற்பு
x
தினத்தந்தி 29 April 2022 2:20 AM IST (Updated: 29 April 2022 2:20 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு தலைவராக புவனேசுவரி பதவி ஏற்றுக் கொண்டார்.

அயோத்தியாபட்டணம்:-
அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த பார்வதி மணி பதவி வகித்து வந்தார். இவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து, ஒன்றியக்குழு துணைத்தலைவராக இருந்த தி.மு.க.வை சேர்ந்த புவனேஸ்வரி செந்தில்குமார் ஒன்றியக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் ஒன்றியக்குழு தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார்.  நிகழ்ச்சியில் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம்,  முன்னாள் ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் அவருக்கு அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய ஆணையாளர்கள் இளங்கோ, சிராஜீதீன் மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story