இரட்டிப்பு பணம் தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.1 லட்சம் மோசடி


இரட்டிப்பு பணம் தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.1 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 29 April 2022 2:20 AM IST (Updated: 29 April 2022 2:20 AM IST)
t-max-icont-min-icon

இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம்:-
ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது தங்கையின் செல்போன் நம்பருக்கு கடந்த 25-ந் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியில் பதிவு செய்தபோது, பணத்தை முதலீடு செய்தால் அதற்கு இரட்டிப்பு தொகை தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தகவலை பாலமுருகனுக்கு அவரது தங்கை அனுப்பி வைத்துள்ளார். இதனால் அதை உண்மை என்று நம்பிய அவர், முதலில் ரூ.100-ஐ ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்துள்ளார். அதற்கு பாலமுருகன் வங்கி கணக்கிற்கு ரூ.190 வந்தது. அதன்பிறகு 2-வது முறையாக ரூ.2,100 அனுப்பி வைத்தபோது, ரூ.2,755 திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு 3-வது முறையாக ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 500-ஐ பல்வேறு தவணைகளில் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதற்கான தொகையை திருப்பி அனுப்பவில்லை. இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்த பாலமுருகன், இதுதொடர்பாக மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து பணத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story