ரூ.89 ஆயிரம் உரியவர் வங்கி கணக்கில் சேர்ப்பு
கடன் தருவதாக மோசடி செய்யப்பட்ட ரூ.89 ஆயிரத்து 600 உரியவர் வங்கி கணக்கில் சேர்த்து சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
சேலம்:-
கடன் தருவதாக மோசடி செய்யப்பட்ட ரூ.89 ஆயிரத்து 600 உரியவர் வங்கி கணக்கில் சேர்த்து சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
பங்கு சந்தை
சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 42). இவர் சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் மதுரையை சேர்ந்த யுவராஜ் என்பவர் பங்கு சந்தையில் மேலாளராக பணியாற்றி வருவதாக கூறி அறிமுகமானார். அவரது வங்கி கணக்கில் ரூ.6 ஆயிரத்து 400 செலுத்தினால் குறைந்த வட்டியில் ரூ.2 லட்சம் கடன் தருவதாக கூறினார்.
இதையடுத்து நான், நண்பர்கள் பலரிடம் வசூல் செய்து மொத்தம் ரூ.89 ஆயிரத்து 600-ஐ யுவராஜ் வங்கி கணக்கில் செலுத்தினேன். ஆனால் கடன் வழங்கவில்லை. அவரிடம் தொடர்பு கொண்ட போது சரியான பதில் இல்லை. பின்னர் மோசடி செய்யப்பட்டது தெரிந்தது. இது குறித்து நடவடிக்கை எடுத்து கட்டிய பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
வங்கி கணக்கில் சேர்ப்பு
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோசடி செய்யப்பட்ட ரூ.89 ஆயிரத்து 600-ஐ உரியவர் வங்கி கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார்.
இது குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன் கூறும் போது குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக கூறுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம். அதே போன்று வங்கி கணக்கின் ரகசிய எண்களை மாற்றவர்களிடம் தெரிவிக்க வேண்டாம் என்றார்.
Related Tags :
Next Story