கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 29 April 2022 2:44 AM IST (Updated: 29 April 2022 2:44 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மாபெரும் தடுப்பூசி முகாம் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த முகாமில் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள், இரண்டாவது தவணைக்குரிய நாட்கள் கடந்தவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி காலமான 9 மாதத்திற்கு மேல் நிறைவு பெற்றவர்கள் ஆகியோருக்கு பிரத்யேகமான முறையில் அதிகமான முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் போட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்கள் உடனடியாக தங்களுக்கு அருகாமையில் நடைபெறும் மையங்களுக்கு ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தற்போது நான்காவது அலை உருவாக வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story