ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 80 சதவீத மாடுகள் விற்பனை


ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 80 சதவீத மாடுகள் விற்பனை
x
தினத்தந்தி 29 April 2022 3:27 AM IST (Updated: 29 April 2022 3:27 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 80 சதவீத மாடுகள் விற்பனையானது.

ஈரோடு
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் வாரம்தோறும் வியாழக்கிழமை கறவை மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மராட்டியம் உள்பட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வருகை தந்து மாடுகளை விலை பேசி பிடித்து செல்கின்றனர். அதேபோல் ஈரோடு மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விற்பனைக்காக மாடுகளை விவசாயிகள், வியாபாரிகள் கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று நடந்த சந்தைக்கு 400 பசுமாடுகள், 150 எருமை மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. இதில் 80 சதவீதம் மாடுகள் விற்பனை ஆனது.
இதுகுறித்து சந்தை நிர்வாகிகள் கூறும்போது, ‘இன்று (அதாவது நேற்று) கூடிய சந்தையில், பசுமாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரைக்கும், எருமை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரைக்கும் விற்பனை ஆனது. மேலும் நேற்று முன்தினம் 100 கன்று குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. இவை ஒன்று ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. உள்ளூர் மற்றும் வெளிமாநில வியாபாரிகள் வருகை அதிகமாக இருந்ததால் மாடு விற்பனை 80 சதவீதம் நடைபெற்றது’ என்றனர்.

Next Story