ரெயிலை மறித்து ஊழியர்கள் போராட்டம்
ரெயிலை மறித்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
பொன்மலைப்பட்டி:
தண்டவாளத்தில் அமர்ந்தனர்
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயில் நேற்று மாலை 6.30 மணியளவில் பொன்மலை மஞ்சத்திடல் ரெயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரெயிலில் பயணித்த ரெயில்வே ஊழியர்கள் சிலர், திடீரென இறங்கி ரெயிலுக்கு முன்பாக தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ரெயில்வே ஊழியர்கள் கூறுகையில், திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் வேலை செய்யும் ஊழியர்கள் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக மாலை 5.30 மணி அளவில் தனி ரெயில் வருவது வழக்கம். ஆனால் அந்த ெரயிலானது நீண்ட நேரம் வராத நிலையில், மாலை 6.15 மணி அளவில் திருச்சியில் இருந்து மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் பொன்மலை ரெயில் நிலையத்துக்கு வந்தது.
ரெயில் போக்குவரத்து பாதிப்பு
அங்கு நீண்ட நேரம் காத்திருந்த ரெயில்வே ஊழியர்கள் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி பயணித்தனர். மேலும் சரியான நேரத்தில் ஊழியர்களுக்கான தனி ரெயில் வருவதில்லை என்றும், அடிக்கடி இதுபோன்று நடப்பதாகவும், அதனால் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், அந்த ரெயிலில் வந்த கார்டு ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ெரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மஞ்சத்திடல் ெரயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட்டை கடக்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
Related Tags :
Next Story