ரசாயனம் தெளித்து பழுக்க வைத்த 4½ டன் மாம்பழங்கள் பறிமுதல்
ரசாயனம் தெளித்து பழுக்க வைத்த 4½ டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி:
திருச்சி காந்தி மார்க்கெட்டில் ரசாயனம் தெளித்து பழுக்க வைத்து மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில் அதிகாரிகள் நேற்று காந்திமார்க்கெட்டில் ஆய்வு செய்தனர். அப்போது, 2 கடைகளில் ரசாயன மருந்து தெளித்து மாம்பழங்களை பழுக்க வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கடைகளில் இருந்து ரசாயனம் தெளித்து பழுக்கவைக்கப்பட்டு இருந்த 4½ டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவை அரியமங்கலத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு அழிக்கப்பட்டன.
Related Tags :
Next Story