வேளச்சேரியில் கோவிலுக்கு சொந்தமான ரூ.57 லட்சம் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
வேளச்சேரியில் கோவிலுக்கு சொந்தமான ரூ.57 லட்சம் ஆக்கிரமிப்பு நிலம் அறநிலையத்துறை நடவடிக்கையால் மீட்கப்பட்டது.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுரையின்படி, கோவிலுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக கோவில் வசம் கொண்டு வரும் பணி, போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. அந்த வகையில், சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான, ரூ.57 லட்சம் மதிப்புள்ள 690 சதுர அடி மனைகளை சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.
இதனை, சென்னை இணை கமிஷனரின் உத்தரவின்படி, ஆக்கிரமிப்பு கட்டிடங்களை பூட்டி இலாக்கா முத்திரையிட்டு, சொத்துக்கள் மீட்டு கோவில் வசம் கொண்டு வரப்பட்டது. இந்த நிகழ்வின்போது, சென்னை மண்டல உதவி கமிஷனர் பெ.க.கவெனிதா, வருவாய் ஆய்வாளர் பிரியதர்ஷினி, கோவில் செயல் அலுவலர் திவ்யா, காவல் துறை அதிகாரிகள் மற்றும் கோவில் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story