திருவான்மியூர் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது
திருவான்மியூர் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் சங்கிலி பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை திருவான்மியூர் ரெயில் நிலையத்தில், பயணிகளிடம் தொடர்ந்து சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்று வருவதாக, ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து, ரெயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. வனிதா உத்தரவின்பேரில், துணை சுப்பிரண்டு ஸ்ரீகாந்த் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை கடற்கரை ரெயில் நிலையம் முதல் வேளச்சேரி ரெயில் நிலையம் வரை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ரெயில் பயணிகளிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மயிலாப்பூரை சேர்ந்த ஜெயராமன் (வயது 34) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 8 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். தனிப்படை போலீசாரை கூடுதல் இயக்குனர் வனிதா நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
Related Tags :
Next Story