பேட்டரியை விழுங்கிய 4 வயது சிறுமி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
சென்னை அயனாவரத்தில் பேட்டரியை விழுங்கிய 4 வயது சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திரு.வி.க. நகர்,
சென்னை அயனாவரம் பி.ஈ.கோவில் வடக்கு மாடவீதி தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகள் தனுஸ்ரீ(வயது 4). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறாள்.
நேற்று முன்தினம் மாலை வீட்டில் விளையாட்டு் பொருட்களை வைத்து விளையாடிக்கொண்டு இருந்த தனுஸ்ரீ, திடீரென அதிலிருந்த பட்டன் வடிவிலான சிறிய பேட்டரி ஒன்றை எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டாள். இதனால் அதிர்ச்சி அடைந்த கணேஷ், மகளை உடனடியாக எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு தனுஸ்ரீக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story