மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறித்த வாலிபர் கைது


மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 April 2022 7:59 PM IST (Updated: 29 April 2022 7:59 PM IST)
t-max-icont-min-icon

மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கடமலைக்குண்டு:
கடமலைக்குண்டு பட்டாளம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மேரி (வயது 77). இவர் தென்னந்தோப்புகளுக்கு சென்று தென்னங்கீற்றுகளில் இருந்து விளக்குமார் தயார் செய்து அதனை கடைகளில் விற்பனை செய்து வருகிறார். இன்று காலை மேரி வழக்கம் போல அருகே உள்ள ஒரு தென்னந்தோப்பில் அமர்ந்து தென்னங்கீற்றுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். 
அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் மேரி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுகுறித்து மேரி கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து துரிதமாக செயல்பட்டு சுமார் 1 மணி நேரத்திற்குள் நகை பறிப்பில் ஈடுபட்ட கடமலைக்குண்டுவை சேர்ந்த சூர்யா (27) என்பவரை கைது செய்தனர். 
அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சூர்யா, கடமலைக்குண்டுவை சேர்ந்த அவரது நண்பர் முருகன் (29) என்பவருடன் சேர்ந்து மேரியின் நகைளை பறித்துவிட்டு அதை கடமலைக்குண்டு டாஸ்மாக் கடை அருகே ஒரு தனியார் தோட்டத்தில் மண்ணில் புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் சூர்யாவை தனியார் தோட்டத்திற்கு அழைத்து சென்று அங்கு மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முருகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story