திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற உபதலை அரசு பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற உபதலை அரசு பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்
குன்னூர்
குன்னூர் அருகே உபதலை அரசு மேல்நிலைப் பள்ளியில் திருக்குறளை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஐயரின்ரெஜி தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பரமன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக குன்னூர் தனியார் கல்லூரி தமிழ் துறை தலைவர் மலர் விழி, பேராசிரியர் அமுதா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திருக்குறள் மனப்பாட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. குறைவாக விடுமுறை எடுத்த மாணவர்களுக்கும், பொது அறிவு தொடர்பான வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை லோகேஸ்வரி வரவேற்றார். முடிவில் ஆசிரியை சந்திரகலா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் சிவகுரு செய்திருந்தார்.
Related Tags :
Next Story