ஊட்டி நகராட்சியில் பாதாள சாக்கடை கழிவுநீர் குடிநீருடன் கலக்கிறது


ஊட்டி நகராட்சியில் பாதாள சாக்கடை கழிவுநீர் குடிநீருடன் கலக்கிறது
x
தினத்தந்தி 29 April 2022 8:18 PM IST (Updated: 29 April 2022 8:18 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சியில் பாதாள சாக்கடை கழிவுநீர் குடிநீருடன் கலக்கிறது என்று கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

ஊட்டி

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி கூட்டம் நடந்தது. இதற்கு தலைவர் வாணீஸ்வரி தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும், கவுன்சிலர்கள் ஜார்ஜ், கீதா, ராஜேஸ்வரி, அன்புசெல்வன், குமார் ஆகியோர் ஆணையாளர் காந்திராஜை முற்றுகையிட்டு, அனைவருக்கும் வீடு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இந்த திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைபடுத்தப்பட்டு வரும் நிலையில், ஊட்டியில் மட்டும் புவியியல்துறை அனுமதி பெற வேண்டும் என நிர்பந்திக்கப்படுவதால், ஏழை மக்கள் வீடு கட்ட முடியாமல் தவிக்கின்றனர். இதனால் அரசு வழங்கிய பட்டா இடத்தில் வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என்றனர். மேலும் ஊட்டி நகராட்சியில் பாதாள சாக்கடை கழிவுநீர் குடிநீருடன் கலக்கிறது. 
இதனால் அந்த தண்ணீரை குடிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கூறினார்கள். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைவர் மற்றும் ஆணையாளர் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story