கூடலூரில் கோடை விழாவை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும்


கூடலூரில் கோடை விழாவை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 29 April 2022 8:18 PM IST (Updated: 29 April 2022 8:18 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் கூடுதல் நாட்கள் கோடை விழா நடத்த வேண்டும் என ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ. தெரிவித்தார்.

கூடலூர்

கூடலூரில் கூடுதல் நாட்கள் கோடை விழா நடத்த வேண்டும் என ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ. தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் வருகிற 7-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து 13, 14, 15 ஆகிய தேதிகளில் கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி மற்றும் கோடை விழா மார்னிங் ஸ்டார் பள்ளிக்கூட மைதானத்தில் நடக்கிறது. இதையொட்டி வருவாய், நகராட்சி, தோட்டக்கலை உள்பட பல்வேறு துறை சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாசனை திரவிய கண்காட்சி மற்றும் கோடை விழா நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ராஜேஷ்வரன், தாசில்தார் சித்தராஜ் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.

கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும்

கூட்டத்தில் வாசனை திரவிய கண்காட்சி, கோடை விழா நடத்துவது குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அப்போது பந்தலூர் பகுதியில் உள்ள மக்கள் கோடை விழாவுக்கு வந்து செல்லும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். மேலும் கூடலூர் பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லாததால் கோடை விழாவை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும். இதேபோல் கூடலூரில் சுற்றுலா திட்டங்கள் கொண்டு வரவேண்டும் என ஆர்.டி.ஓ.விடம் பல்வேறு தரப்பினரும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் கூறியதாவது:- கூடலூரில் கோடை விழா பல்வேறு தரப்பினரும் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்திடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

Next Story