குறுஞ்செய்திகளை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம்


குறுஞ்செய்திகளை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம்
x
தினத்தந்தி 29 April 2022 8:19 PM IST (Updated: 29 April 2022 8:19 PM IST)
t-max-icont-min-icon

அஞ்சல்துறை மூலம் அனுப்புவது போன்று வரும் குறுஞ்செய்திகளை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என அதிகாரி தெரிவித்தார்

திருவண்ணாமலை

சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக அஞ்சல் துறை அனுப்புவது போன்று பல குறுஞ்செய்திகள் பலருக்கும் அனுப்பப்படுகின்றது. 

அதில் அஞ்சல் துறை வாயிலாக மானியம் வழங்கப்படுவதாகவும், பரிசுகள், போட்டிகள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்து ஒரு லிங்க் (இணைப்பு) கொடுக்கப்பட்டு அதனை பயன்படுத்தவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

 ஆனால் அஞ்சல்துறை இது போன்று எந்தவிதமான போட்டிகளையும் நடத்தவில்லை. மேலும் இதுபோன்று வரும் லிங்க் தொடுவதன் மூலமும் அதில் தகவல்களை கொடுப்பது மூலமும் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

 எனவே தங்களின் பிறந்த தேதி, செல்போன் எண், வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை இது போன்ற போலி வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டாம். 

அஞ்சல் துறைக்கும் இது போன்று பரப்பப்படும் பொய் தகவல்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. எனவே பொதுமக்கள் இது போன்ற தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம். அஞ்சல் துறையும், இது போன்ற போலி தகவல்களை தடை செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறது. 

இந்த தகவலை திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அமுதா தெரிவித்துள்ளார்.

Next Story