கோத்தகிரியில் நாக வாகனத்தில் மாரியம்மன் திருவீதி உலா


கோத்தகிரியில் நாக வாகனத்தில் மாரியம்மன் திருவீதி உலா
x
தினத்தந்தி 29 April 2022 8:19 PM IST (Updated: 29 April 2022 8:19 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் நாக வாகனத்தில் மாரியம்மன் திருவீதி உலா

கோத்தகிரி

கோத்தகிரி கடைவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்வேறு சமுதாய மக்களின் உபயம் மூலம் 22 நாட்கள் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். திருவிழாவின் 18-வது நாளையொட்டி  அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்ட நாக வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திரு வீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். 

Next Story