காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா பந்தகால் முகூர்த்தம்
காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா பந்தகால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால்
இறைவனின் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். இவரின் வரலாற்று நிகழ்வுகளை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மாங்கனித்திருவிழா வருகிற ஜூலை 10-ந் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு கோவிலில் பந்தகால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவல் குழு தலைவர் வக்கீல் வெற்றிசெல்வன், துணைத் தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கீல் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 10-ந் தேதி மாப்பிள்ளை அழைப்பும், 11-ந் தேதி திருக்கல்யாணமும், 13-ந் தேதி சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவளக்கால் சப்பரத்தில் வீதியுலாவும் நடக்கிறது. வீதியுலாவின்போது பக்தர்கள், தங்கள் நேர்த்திக்கடனை தீர்க்கும் வகையில், மாங்கனிகளை வாரி இறைப்பார்கள். ஜூலை 14-ந் தேதி, அம்மையாருக்கு, சிவபெருமான் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக மாங்கனித்திருவிழா கோவில் உள்ளேயே எளிமையாக நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்திருப்பதால், வழக்கம் போல் விமரிசையாக திருவிழாவை நடத்த கோவில் அறங்காவல் குழுவினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story