தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு 60 ஆயிரம் டன் நிலக்கரி வருகை
தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு கப்பலில் 60 ஆயிரம் டன் நிலக்கரி வந்துள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. இந்த மின்உற்பத்தி எந்திரங்களுக்கு தேவையான நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் இருந்து 30 ஆயிரம் டன் நிலக்கரி தூத்துக்குடி அனல்மின்நிலையத்துக்கு வந்தது. இதனால் நேற்று காலையில் தூத்துக்குடியில் 40 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஒடிசாவில் இருந்து 60 ஆயிரம் டன் நிலக்கரியுடன் ஒரு கப்பல் தூத்துக்குடிக்கு வந்து உள்ளது. இந்த கப்பலில் இருந்து இன்று (சனிக்கிழமை) நிலக்கரி இறக்கப்பட்டு அனல் மின்நிலையத்துக்கு கன்வேயர் பெல்ட் மூலம் கொண்டு செல்லப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் அனல் மின்நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு குறைந்து உள்ளதாகவும், மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story