பெங்களூரு வரும் அமித்ஷாவுடன் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிப்பேன்; பசவராஜ் பொம்மை பேட்டி


பெங்களூரு வரும் அமித்ஷாவுடன் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிப்பேன்; பசவராஜ் பொம்மை பேட்டி
x
தினத்தந்தி 29 April 2022 8:44 PM IST (Updated: 29 April 2022 8:44 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு வரும் அமித்ஷாவுடன் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிப்பேன் என பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில்  நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்
கூறியதாவது:-

  மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக எங்கள் கட்சியின் சில எம்.எல்.ஏ.க்கள் வெளிப்படுத்திய உணர்வுகளை கட்சி மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். இந்த விஷயத்தில் சரியான நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 3-ந் தேதி பெங்களூரு வருகிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவருடன் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிப்பேன். நான் இன்று இரவு டெல்லி செல்கிறேன். 

நாளை அங்கு நடைபெறும் முதல்-மந்திரிகள் மாநாட்டில் கலந்து கொள்கிறேன். மாலையில் பிரதமர் ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்து நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறேன். அதன் பிறகு 1-ந் தேதி காலையில் பெங்களூரு திரும்புகிறேன். இந்த பயணத்தின்போது கட்சி மேலிட தலைவர்களையோ அல்லது மத்திய மந்திரிகளையோ சந்திக்கும் திட்டம் இல்லை.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

  கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்கள் மட்டுமே உள்ளன. தேர்தல் நெருங்குவதால் இன்னும் மந்திரிசபையை விரிவாக்கம் செய்யாமல் இருப்பதை கண்டு தனது அதிருப்தியை ரேணுகாச்சார்யா வெளிப்படுத்தி வருகிறார்.

Next Story