திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா மே 26ந் தேதி தொடங்குகிறது
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா மே 26-ந் தேதி தொடங்குகிறது
காரைக்கால்
காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா மே 26-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி கோவிலில் பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. அப்போது, திருவிழாவுக்கு பந்தல் அமைக்கவுள்ள கம்பத்திற்கு சிவாச்சாரியார்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஜூன் 9-ந் தேதி தேரோட்டமும், தொடர்ந்து, சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story