முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு பட்டதாரி-முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கழகத்தின் மாவட்ட தலைவர் ராஜாக்கிளி தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி செயலாளர் டேப்னி கிறிஸ்டினா, செயலாளர் காஜாமைதீன், அமைப்பு செயலாளர் கிருஷ்ணதாஸ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பணி நிரவல் கலந்தாய்வு மூலம் இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஈட்டிய விடுப்பு ஊதியத்தை விரைவில் வழங்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு தனியாக பண் பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story