தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு


தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 29 April 2022 9:48 PM IST (Updated: 29 April 2022 9:48 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் நேரில் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி:
மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தமிழக அரசால் ஒரு நபர் ஆணைய அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் பல்வேறு மாநகராட்சிகளில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். நேற்று அவர் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவர் சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் வினியோகம், பூங்கா மேம்பாடு, பக்கிள் ஓடை அபிவிருத்தி, பஸ் நிலைய அபிவிருத்தி பணிகள், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் உள்ளிட்ட 84 வகையான பணிகளை ஆய்வு செய்தார். நேற்று மாலையில் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். திட்டப்பணிகள் குறித்து விரிவாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, செயற்பொறியாளர் (பணிகள் மற்றும் திட்டம்) சுரேஷ் ரூபன் பொன்னையா, மாநகர நல அலுவலர் அருண்குமார் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Next Story