ரூ.3கோடிக்கு பருத்தி ஏலம்


ரூ.3கோடிக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 29 April 2022 9:58 PM IST (Updated: 29 April 2022 9:58 PM IST)
t-max-icont-min-icon

ரூ.3கோடிக்கு பருத்தி ஏலம்

மூலனூர், ஏப்.30-
 மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பிரதி வாரம் வியாழக்கிழமையன்று பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 1330நபர்கள் பருத்தி கொண்டு வந்திருந்தனர். பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர் திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.13,358-க்கும் குறைந்தபட்சவிலை ரூ.11,850-க்கும் சராசரி விலை ரூ.12,350-க்கும் விற்பனையானது. பருத்தியின் மொத்த அளவு 9ஆயிரத்து 880 மூட்டைகள், குவிண்டால் 3204.64 இதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 80 லட்சத்து 31 ஆயிரத்து 479-க்கு ஏலம் போனது. 20 வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர் என முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
கடந்த வாரம் பருத்தி வரவு அதிகரிப்பு காரணமாக கலன்களில் பருத்தியை சேமிக்கும் நிலை உள்ளது எனவும் இனி வரும் காலங்களில் பருத்தியை மழை வெயில் காலங்களில் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் இந்த வாரம் கலங்களில் செட் அமைத்து மழை வெயில் காலங்களில் நனையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story