கஞ்சா வழக்கில் தொடர்புடைய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நாகர்கோவிலில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
குண்டர் சட்டம் பாய்ந்தது
குமரி மாவட்டத்தில் மது, கஞ்சா, கள்ளச்சாராயம், கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் 2 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
அதாவது, நாகர்கோவில் கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி என்ற சின்ன கோழி (வயது 26). இவர் மீது கோட்டார் போலீஸ் நிலையத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், கிருஷ்ணமூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் அரவிந்த்துக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று கிருஷ்ணமூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தில் கோட்டார் போலீசார் கைது செய்து நேற்றுமுன்தினம் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைப்பு
இதேபோல் கோட்டார் ரெயில்வே காலனியை சேர்ந்த நம்பி என்ற நம்பிராஜன் (24) என்பவர் மீதும் கோட்டார் போலீஸ் நிலையத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் வழக்குகள் உள்ளன. இதனைதொடர்ந்து நம்பிராஜனையும் கோட்டார் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாயைங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story