பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும்


பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும்
x
தினத்தந்தி 29 April 2022 10:01 PM IST (Updated: 29 April 2022 10:01 PM IST)
t-max-icont-min-icon

டீசல் விலை உயர்வால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடலூர், 

கடலூர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் நலச்சங்க செயலாளர் தேசிங்குராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. அன்றைய தினம் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.57.58 ஆக இருந்தது. தற்போது ஒரு லிட்டர் டீசல் ரூ.103.21 ஆக உள்ளது. அதாவது ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.45.63 வரை விலை உயர்ந்துள்ளது. 
அதேபோல் ஒரு செட் டயருக்கு ரூ.10 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது. வாகன உதிரிபாகங்கள், வாகன என்ஜின் ஆயில், வாகன சேஸ் போன்றவை 3 மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. மேலும் தற்போது வி.கே.டி. சாலை, கடலூர்-பண்ருட்டி சாலை, கடலூர் சிதம்பரம் சாலையில் விரிவாக்கப்பணிகள் நடைபெறுகிறது. இதனால் டீசல் மற்றும் வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரித்து உள்ளது.
ஆனால் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கடந்த 5 ஆண்டுகளாக பஸ் கட்டணம் (டிக்கெட்) உயர்த்தப்படவில்லை. இதனால் அரசு மற்றும் தனியார் பஸ்கள் பெரும் நஷ்டத்தில் இயங்குகின்றன. எனவே தமிழக அரசு இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு, மேலும் நஷ்டம் ஏற்படாமல் இருக்க உடனடியாக பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும். 
இவ்வாறு அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Next Story