லாரியில் கடத்திய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவா் உள்பட 2 பேர் கைது
நாகர்கோவிலில் லாரியில் கடத்திய 7 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் லாரியில் கடத்திய 7 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் சோதனை
நாகர்கோவில், வடசேரி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வடசோி போலீசாருக்கும், மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், விஜி ஆகியோர் தலைமையில் போலீசார் வடசேரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு லாரி வேகமாக வந்தது. போலீசார் அந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.
டிரைவர் உள்பட 2 பேர் கைது
சோதனையில், லாரியில் 7 ஆயிரத்து 300 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து லாரியுடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், லாரி டிரைவர் நாகர்கோவில் ஒழுகினசேரியை சோ்ந்த மது (வயது48), கீழபுத்தேரியை சேர்ந்த வேலாயுதம் பிள்ளை (33) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-----
Related Tags :
Next Story