திருப்பத்தூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவாயிகள் கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தமையில் நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:-
இணைக்க வேண்டும்
திருப்பத்தூர் மாவட்டத்தில் பாலாறு 48 கிலோமீட்டர் தூரம் செல்கிறது. எனவே பாலாறு அலுவலகம் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் பாலாறு பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணமுடியும். கலெக்டர் வரும் நாளில் விவசாயிகள் கூட்டத்தை வைக்க வேண்டும். அல்லது கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும். வெலதிகாமணி பெண்டாவில் உள்ள 2 கண்மாய்களை இணைக்க வேண்டும். இதனால் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும்.
ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி உள்ளது. மழைக்காலங்களில் செல்வதற்கு கடினமாக உள்ளது. எனவே சாலை அமைக்க வேண்டும். அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் காலை மற்றும் இரவு நேரங்களில் 8 மணி நேரம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையம்
மாவட்டத்தில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் இல்லை. எனவே மாவட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர்.
இதற்கு அதிகாரிகள் பதில் அளித்து பேசுகையில் விவசாயிகளின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பத்தூர் மாவட்டத்தில் 96 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
Related Tags :
Next Story