மின்னல் தாக்கி 35 ஆடுகள் செத்தன


மின்னல் தாக்கி 35 ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 29 April 2022 4:46 PM GMT (Updated: 2022-04-29T22:16:17+05:30)

மின்னல் தாக்கி 35 ஆடுகள் செத்தன

சிக்கமகளூரு: தாவணகெரே மாவட்டம் ெசன்னகிரி தாலுகா மாச்சிகேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா. விவசாயியான, இவர் நூற்றுக்கணக்கான  ஆடுகள் வரை வளர்த்து வருகிறார். தனக்கு சொந்தமான ஆடுகளை சித்தப்பா ஒரு வெளிப்பகுதியில் கொட்டகை அமைத்து வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தாவணகெரே மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் சூறைகாற்றுடன் கனமழை பெய்தது.  இந்த நிலையில் மின்னல் தாக்கியதில் சித்தப்பா வளர்த்து வந்த ஆடுகளில் 35 ஆடுகள் செத்தன. 

மேலும் சில ஆடுகள் காயங்களுடன் உயிர்தப்பின. நேற்று காலையில் அவர் ஆடுகளை மேய்க்க அழைத்து செல்ல கொட்டகைக்கு வந்தார். அப்போது ஆடுகள் செத்து கிடப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே தகவல் அறிந்து ெசன்னகிரி தொகுதி எம்.எல்.ஏ. மடால விருபாக்சப்பா வந்தார். அவர், விவசாயி சித்தப்பாவுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் தாசில்தாரிடம் மனு கொடுக்கும்படியும், நிவாரணம் பெற்று தருவதாக உறுதியளித்தார்.

Next Story