ரம்ஜான் பண்டிகையையொட்டி செஞ்சி வார சந்தையில் ரூ. 6 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ரம்ஜான் பண்டிகையையொட்டி செஞ்சி வார சந்தையில் ரூ. 6 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
செஞ்சி,
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை வருகிற 3-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தற்போது ஆடுகளின் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது.
அந்த வகையில், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை ஆடுகள் விற்பனைக்கு தனி சிறப்பு வாய்ந்தததாகும். அந்த வகையில், வெள்ளிக்கிழமையான நேற்று வார வந்தை வழக்கம் போல் நடந்தது.
ரூ.6 கோடிக்கு விற்பனை
இங்கு ஆடுகள் விற்பனை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. சென்னை, திருவண்ணாமலை, வேலூர், சேலம், புதுச்சேரி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் செஞ்சி சந்தைக்கு வந்து போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.
வாங்கிய ஆடுகளை லாரி மற்றும் வேன்களில் ஏற்றி கொண்டு சென்றனர். நேற்று மட்டும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் சுமார் ரூ.6 கோடி அளவுக்கு விற்பனையாகி இருக்கும் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story