விழுப்புரத்தில் வெங்காயம் மூட்டை ஏற்றிவந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து


விழுப்புரத்தில் வெங்காயம் மூட்டை ஏற்றிவந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 29 April 2022 10:24 PM IST (Updated: 29 April 2022 10:24 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் வெங்காயம் மூட்டை ஏற்றிவந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


விழுப்புரம், 

பெங்களூருவில் இருந்து வெங்காய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் பிடாகத்திற்கு ஒரு சரக்கு வாகனம் புறப்பட்டது. இந்த வாகனத்தை திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சித்தானங்கூரை சேர்ந்த சொக்கலிங்கம் (வயது 36) என்பவர் ஓட்டிச்சென்றார்.

 இந்த வாகனம் நேற்று பகல் 12 மணியளவில் விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் அரசு ஊழியர் நகர் பகுதியில் வந்தபோது திடீரென சரக்கு வாகனத்தின் பின்பக்க இடதுபுற டயர் பழுதானது.  

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தறிகெட்டு ஓடி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் இருந்த வெங்காய மூட்டைகள் சாலையில் சரிந்து விழுந்தது. சரக்கு வாகன டிரைவர் சொக்கலிங்கம் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 


விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

பின்னர் மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு அந்த வாகனத்தில் வெங்காய மூட்டைகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பிறகு சரக்கு வாகனத்தின் டயர், பழுது சரிசெய்யப்பட்டு அந்த வாகனம் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றது. 

Next Story