கந்திலி ஒன்றியத்தில் 5 கிராம சாலைகள் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைப்பு


கந்திலி ஒன்றியத்தில் 5 கிராம சாலைகள் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 29 April 2022 4:59 PM GMT (Updated: 29 April 2022 4:59 PM GMT)

கந்திலி ஒன்றியத்தில் 5 கிராம சாலைகள் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பத்தூர்

கந்திலி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றியக்குழு தலைவர் திருமதி திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் மோகன் குமார் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரகலா வரவேற்றார்.

 கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு நடைபெற்று வரும்பணிகளை உடனடியாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பழுதடைந்த நூலக கட்டிடங்கள், ரேஷன் கடைகளை சீரமைத்தல், ஊராட்சி பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் கட்டுதல், 15-வது ஊதியக்குழு மூலம் குடிநீர் வசதி, பைப்லைன் அமைத்தல்,  தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், வார சந்தை குறித்தும் விவாதங்கள் நடைபெற்றது.

மேலும் கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆம்பள்ளி, கவுண்ட பலூர் வழி ராஜாவூர் சாலை, பலளப்பள்ளி, கொரட்டி முருகன் கோவில் சாலை, சின்ன கண்ணாலபட்ட, சாலை ஆகிய 5 கிராம ஊராட்சி சாலைகளை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்து மாநில நெடுஞ்சாலை சாலையாக மாற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள், வேளாண்மைத் துறை அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல்கலீல் நன்றி கூறினார்.

Next Story