தமிழாசிரியர்களுக்கு கற்றல் விளைவு பயிற்சி பணிமனை


தமிழாசிரியர்களுக்கு கற்றல் விளைவு பயிற்சி பணிமனை
x
தினத்தந்தி 29 April 2022 5:15 PM GMT (Updated: 29 April 2022 5:15 PM GMT)

தமிழாசிரியர்களுக்கு கற்றல் விளைவு பயிற்சி பணிமனை

உடுமலை,
உடுமலையில் 9 மற்றும்10-ம் வகுப்பு தமிழாசிரியர்களுக்கு கற்றல் விளைவு பயிற்சி பணிமனை நடந்தது.
கற்றல் விளைவு பயிற்சி பணிமனை
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மாணவர்களின் கல்வித்தர மேம்பாட்டிற்காக ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளிக்க திட்டமிட்டுள்ளது. 
அதன்படி உடுமலையை அடுத்து திருமூர்த்தி நகரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், கற்றல் விளைவுகளை மாணவர்கள் அடைவதற்காக, ஆசிரியர்கள் ஒவ்வொரு பாடத்திலும் கடினப்பகுதிகளை அடையாளம் கண்டு விளக்குவதற்கான கற்றல் விளைவுகள் சார்ந்த கற்பித்தல் செயல்பாடுகள், கற்பித்தல் குறிப்பு தயாரித்தல் மற்றும் அவற்றை மீளாய்வு செய்தல் போன்றவற்றின் 3-ம் கட்ட பயிற்சி பணிமனை உடுமலை சர்தார் வீதியில் உள்ள நகராட்சி எக்ஸ்டன்சன் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
தமிழாசிரியர்கள்
9 மற்றும்10-ம் வகுப்பு தமிழாசிரியர்களுக்கான இந்த பயிற்சி பணிமனைக்கு திருமூர்த்தி நகர்மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்வீ.சங்கர்தலைமைதாங்கிபேசினார்.அப்போது, இந்த பணிமனையின் அவசியம், கற்பித்தல் குறிப்பு எழுதுவதன் அவசியம் ஆகியவை குறித்து ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்தார். பயிற்சி நிறுவனத் துணை முதல்வர் விமலாதேவி வாழ்த்தி பேசினார். இந்த பணிமனையின் கருத்தாளராக பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ராஜாவும், வல்லுநராக முதுநிலை விரிவுரையாளர் சரவணகுமாரும் மதிப்பீட்டு வினாக்களை வடிவமைத்தல், வகைதொகை அடிப்படையில் வினாக்களை உருவாக்குதல், வினாக்கள் வடிவமைப்பதில் இடம்பெற வேண்டிய முக்கியக்கருத்துக்கள், கற்பித்தல் குறிப்பு சார்ந்த அறிவுரைகள் ஆகியவை குறித்துக் விளக்கி கூறினர்.
இந்த பணிமனையில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தயாரிக்கும் கற்பித்தல் குறிப்புகள் மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

Next Story