வாலிபருக்கு 14 ஆண்டு சிறை


வாலிபருக்கு 14 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 29 April 2022 5:22 PM GMT (Updated: 2022-04-29T22:52:39+05:30)

வாலிபருக்கு 14 ஆண்டு சிறை

திருப்பூர், ஏப்.30-
திருப்பூர் பூம்புகார் செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (வயது 37). இவர் அப்பகுதியில் பனியன் நிறுவனம் வைத்துள்ளார். இவரிடம் தென்னம்பாளையத்தை சேர்ந்த அஜித்குமார் (27) என்பவர் வேலை செய்து வந்துள்ளார். சரிவர வேலைக்கு வராததால் அஜித்குமாரை வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். இதில் கோபமடைந்த அஜித்குமார் கடந்த 4-4-2019 அன்று கத்தியால் கோகுலகிருஷ்ணனை குத்தி கொலை செய்ய முயன்றார். இதில் காயமடைந்த கோகுலகிருஷ்ணன் சிகிச்சைக்கு பிறகு உயிர்பிழைத்தார். இதுகுறித்து தெற்கு போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.
இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. 3 பிரிவின் கீழ் அஜித்குமாருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புகழேந்தி தீர்ப்பளித்தார். சிறப்பாக புலன் விசாரணை செய்த தெற்கு போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு பாராட்டினார்.

Next Story