நலிந்தோர் உதவித்தொகை பெற பெண்ணிடம் பணம் வாங்கிய கிராம உதவியாளர் தற்காலிக பணிஇடை நீக்கம்


நலிந்தோர் உதவித்தொகை பெற பெண்ணிடம் பணம் வாங்கிய கிராம உதவியாளர் தற்காலிக பணிஇடை நீக்கம்
x
தினத்தந்தி 29 April 2022 10:56 PM IST (Updated: 29 April 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

நலிந்தோர் உதவித்தொகை பெற பெண்ணிடம் பணம் வாங்கிய கிராம உதவியாளர் தற்காலிக பணிஇடை நீக்கம்

ராசிபுரம்:
நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தொ.ஜேடர்பாளயம் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவருடைய மனைவி தங்காயி. மோகன்தாஸ் இறந்து விட்டதால் மனைவி தங்காயி அரசின் நலிந்தோர் உதவித்தொகை ரூ.20 ஆயிரம் பெற விண்ணப்பம் செய்தார். நீண்ட நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காததால் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரும், அவரது உறவினருமான செந்தாமரை கண்ணனிடம் நலிந்தோர் உதவித்தொகை பெற்று தருவதற்காக ரூ.2 ஆயிரம் கொடுத்தார். 
ஆனால் உதவித்தொகை கிடைக்காததால் தங்காயின் மகள் சங்கீதா இதுகுறித்து செந்தாமரை கண்ணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தான் வாங்கிய ரூ.2 ஆயிரம் எனக்கு மட்டும் அல்ல. உயர் அதிகாரிகளுக்கும் கொடுக்க வேண்டும். கொடுத்தால் தான் நலிந்தோர் உதவித்தொகை கிடைக்கும் என்று கூறினார். இந்த உரையாடல் ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதுகுறித்து வருவாய் துறையினர் செந்தாமரை கண்ணனிடம் விசாரணை நடத்தினர். அதில் செந்தாமரை கண்ணன் தங்காயிடம் ரூ.2 ஆயிரம் வாங்கியது உண்மை என தெரியவந்தது. அதன்பேரில் ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் செந்தாமரை கண்ணனை தற்காலிக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Next Story