கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு காரில் கடத்த முயன்ற ரூ2½ லட்சம் குட்கா பறிமுதல் டிரைவர் கைது
கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு காரில் கடத்த முயன்ற ரூ.2½ லட்சம் மதிப்பிலான 334 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு காரில் கடத்த முயன்ற ரூ.2½ லட்சம் மதிப்பிலான 334 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
குட்கா கடத்தல்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு காரில் குட்கா கடத்துவதாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அமர்நாத் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில் ரூ.2½ லட்சம் மதிப்பிலான 334 கிலோ குட்கா இருப்பது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பெங்களூருவில் இருந்து குட்காவை சென்னைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
டிரைவர் கைது
இதையடுத்து கார் டிரைவர் காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த ரத்தாராம் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 334 கிலோ குட்கா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். குட்கா கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story