ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ3½ கோடிக்கு ஆடுகள் விற்பனை
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.3½ கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
குருபரப்பள்ளி:
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.3½ கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
ரம்ஜான் பண்டிகை
ரம்ஜான் பண்டிகை வரும் 3-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் நேற்று ஆடுகள் விற்பனை ஜோராக நடந்தது. அதிகாலை 5 மணி முதல் 10 ஆயிரம் ஆடுகளை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வந்து இருந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு, கோலார் மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம், சித்தூர் மற்றும் தமிழகத்தில் வேலூர், சென்னை, கடலூர், திருவண்ணாமலை, சேலம், கோவை, திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் என 20 ஆயிரம் பேர் ஆடுகள் வாங்க குவிந்தனர். 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விலை போனது.
ரூ.3½ கோடிக்கு விற்பனை
இதேபோல் எடைக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் ஒரு ஆடு ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை விற்பனை ஆனது. ஆடுகளை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கினர். இதனால் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடந்தது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.3 கோடியே 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. ஆடு விலை அதிகரித்ததால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story