அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி
பன்னீர்தாங்கல் கிராமத்தில் அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது.
கலவை
கலவைைய அடுத்த பன்னீர்தாங்கல் கிராமத்தில் அக்னி வசந்த விழா கடந்த 14-ந்தேதி கலவை சச்சிதானந்தசுவாமி தலைமையில் தொடங்கப்பட்டது. அதில் மகாபாரத சொற்பொழிவாளர் வெட்டுவாணம் ரேவதி, கவியாளர் நல்லாளம் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் மகாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது.
பிரம்மதேசம் துர்க்கையம்மன் கட்டைக்கூத்து நாடக மன்றத்தினரின் 10 நாட்கள் நாடகம் நடந்து வருகிறது. அதில் திரவுபதி திருக்கல்யாணம், சுபத்திரை திருக்கல்யாணம் ஆகியவை நடந்து முடிந்தது.
அதைத்தொடர்ந்து நேற்று அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. அதில் தபசு மரத்தின் அடியில் ஏராளமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி அமர்ந்திருந்தனர். விழாவை பன்னீர்தாங்கல் கிராம பொதுமக்கள் முன்னின்று நடத்தினர்.
Related Tags :
Next Story