வாடிக்கையாளர்களிடம் இரட்டிப்பு வருமானம் தருவதாக கூறி ரூ.2½ கோடி மோசடி
வேளாண் திட்டத்தில் இரட்டிப்பு வருமானம் தருவதாக கூறி வாடிக்கையாளர்களிடம் ரூ.2.50 கோடி மோசடி செய்த இயக்குநரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
வேளாண் திட்டத்தில் இரட்டிப்பு வருமானம் தருவதாக கூறி வாடிக்கையாளர்களிடம் ரூ.2.50 கோடி மோசடி செய்த இயக்குநரை போலீசார் கைது செய்தனர்.
போலீசில் புகார்
மும்பையை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் பிரவிர் பார்க்கர் மற்றும் அவரது மனைவி கவுரி பார்க்கர் நடத்தி வந்த நிறுவனத்தின் வேளாண் முதலீட்டு திட்டத்தில் சேர்ந்திருந்தார். இந்த திட்டத்தில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் செலவில் ஒரு ஏக்கர் நிலத்தில் பண்ணை அமைத்து தருவதாகவும், இதில் இரட்டிப்பு வருமானம் தருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் முதியவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஏமாற்றம் அடைந்த அவர் மாட்டுங்கா போலீசில் புகார் அளித்தார்.
கைது
இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நிறுவனத்தின் இயக்குனர்களான 3 பேர் சேர்ந்து வேளாண் முதலீட்டு திட்டத்தில் வாடிக்கையாளர்களை ஏமாற்றி ரூ.2 கோடியே 50 லட்சம் வரையில் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மோசடி வழக்கில் தொடர்புடைய பிரவீர் பார்க்கர் போலீசாரிடம் சிக்கினார். இவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2-ந் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story