அடுக்குமாடி குடியிருப்புகளை விற்கும் போது சமூக, உணவு பழக்க அடிப்படையில் பாகுபாடு கூடாது-வீட்டு வசதி மந்திரி கூறுகிறார்
அடுக்குமாடி குடியிருப்புகளை விற்கும்போது சமூகம், உணவு பழக்க வழக்கம் உள்ளிட்டவை அடிப்டையில் பாகுபாடு காட்டக்கூடாது என வீட்டு வசதி மந்திரி ஜிதேந்திர அவாத் கூறியுள்ளார்.
மும்பை,
அடுக்குமாடி குடியிருப்புகளை விற்கும்போது சமூகம், உணவு பழக்க வழக்கம் உள்ளிட்டவை அடிப்டையில் பாகுபாடு காட்டக்கூடாது என வீட்டு வசதி மந்திரி ஜிதேந்திர அவாத் கூறியுள்ளார்.
மும்பையில் பாகுபாடு
இந்தியாவின் நிதி தலைநகரமான மும்பையில் குடியிருப்புகளில் வீடு வாங்கும்போதும், வாடகைக்கு வீடு எடுக்க முயலும்போதும் முஸ்லிம்கள் அல்லது அசைவ உணவை உண்ணும் சமூகங்களை சேர்ந்தவர்கள் பாகுபாடுகளை எதிர்க்கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் குடியிருப்பு கட்டிட குழுமம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட செய்தியாளர்களிடம் பேசிய வீட்டுவசதி துறை மந்திரி ஜிதேந்திர அவாத் கூறியதாவது:-
சங்கங்கள் ஆணையிட முடியாது...
நீங்கள் ஆட்டிறைச்சி சாப்பிடுகிறீர்கள் என்றால் எங்கள் வீட்டுவசதி சங்கத்தில் உங்களுக்கு இடமில்லை என்று ஒரு இடத்தில் கூறப்படுகிறது. மற்றொரு கூட்டம் மீன் சாப்பிடுபவர்களை புறக்கணிக்கிறது.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பை உரிமையாளர் விற்கிறார் என்றால் நீங்கள் யாருக்கு விற்கிறீர்கள் என்று வீட்டுவசதி சங்கங்கள் கேட்கிறது. இதை கேட்க நீங்கள் யார்? உரிமையாளர் அவர் விரும்புவர்களுக்கு விற்கட்டும். ஒரு குடியிருப்பை யாருக்கு விற்கலாம் என்று வீட்டுவசதி சங்கங்கள் ஆணையிட அனுமதிக்க முடியாது.
பன்முகத்தன்மை
மும்பை பல மதங்கள், பல சாதிகள் மற்றும் பல மொழிகள் கொண்ட நகரமாக உள்ளது. இந்த பல முகங்கள் தான் மும்பையை உருவாக்கியது. அது மும்பையை பிரிக்கவில்லை. மும்பைக்கு சொந்த கலாசாரம் உண்டு, இந்த கலாசாரத்தை பாழாக்க கூடாது.
ஒரு நபரின் உணவு பழக்கவழக்கம் என்பது அவர்களின் தனிப்பட்ட விவகாரம். நம் நகரம் கடலுக்கு அருகில் இருப்பதால் மும்பையின் அசல் குடிமக்கள் அசைவு உணவு உண்பவர்கள் தான். 1900-ம் ஆண்டு நடத்தப்பட்ட சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு இதை உறுதிப்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story