தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
திருவாடானை அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
தொண்டி,
திருவாடானை தாலுகா, கூகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 78).இவர் சிறுநீரக பாதிப்பால் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலியை தாங்க முடியாமல் அதிகாலை அவரது வீட்டின் முன்பு இருந்த வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த திருவாடானை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு அவரது உடலை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மகன் சிவக்குமார் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story