கொரோனா தடுப்பூசி செலுத்த இ்ன்று 1,100 சிறப்பு முகாம்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்திட இ்ன்று(சனிக்கிழமை) 1,100 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் சங்கர்லால் குமாவத் தகவல் தெரிவித்து உள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்திட இ்ன்று(சனிக்கிழமை) 1,100 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் சங்கர்லால் குமாவத் தகவல் தெரிவித்து உள்ளார்.
கொரோனா தடுப்பூசி
தமிழக அரசின் உத்தரவின்பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்திட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் தொகையில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பொதுமக்களில் 96.14 சதவிகிதம் முதல் தவணை தடுப்பூசியும், 89.14 சதவிகிதம் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர்.
15 முதல் 18 வயது பிரிவில் 86.52 சதவிகிதம் முதல் தவணையும், 64.78 சதவிகிதம் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். 12 முதல் 14 வயது பிரிவில் 77.96 சதவிகிதம் முதல் தவணையும் 36.88 சதவிகிதம் இரண்டாம் தவணையும் செலுத்தி கொண்டுள்ளனர்.
1100 இடங்களில்...
இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்காக இன்று(சனிக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மாவட்டத்தில் மொத்தம் 1100 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழக்கம் போல தடுப்பூசி செலுத்தப்படும். மேலும் அன்றைய தினம் தேவைப்படும் பகுதிகளில் வீடு வீடாக சென்றும், தடுப்பூசி செலுத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டிய நபர்களின் கைப்பேசி எண்களுக்கு சிறப்பு முகாம் தொடர்பான குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் முன்களப் பணியாளர்களும் சிறப்பு முகாமின் போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story