கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து ஆலோசனை
கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து ஆலோசனை நடந்தது.
தோகைமலை,
கொரோனா 4-வது அலையை கட்டுப்படுத்த தோகைமலை ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளிலும் இன்று (சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய ஆணையர்கள் விஜயகுமார், சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் தமிழக அரசின் உத்தரவின் படி, கொரோனா முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பொதுமக்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த அறிவுறுத்த வேண்டும், மேலும் எந்தெந்த இடங்களில் முகாம் நடத்துவது என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில், ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், களப்பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story