திருமங்கலத்தில் ஆட்டுச்சந்தை நேற்று களை கட்டியது
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருமங்கலத்தில் ஆட்டுச்சந்தை நேற்று களை கட்டியது. ரூ.1¼ கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
திருமங்கலம்,
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருமங்கலத்தில் ஆட்டுச்சந்தை நேற்று களை கட்டியது. ரூ.1¼ கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
ஆட்டுச்சந்தை
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
மதுரை மாவட்டத்தில் பெரிய சந்தையாக திகழும் திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் பல்லாயிரக்கணக்கான ஆடுகள் விற்பனையாவது வழக்கம்.
மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து ஆடுகள், கோழிகளை வாங்குவார்கள்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணியில் இருந்து 10 மணிவரை ஆட்டுச்சந்தை களைகட்டியது. கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டது.
ரூ.1¼ கோடி
வழக்கமாக வாரந்தோறும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாகும். ரம்ஜான் பண்டிகைக்கு ஒருசில தினங்களே உள்ள நிலையில் நேற்றைய ஆட்டுச்சந்தையில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் விற்பனையாகின. ஆட்டின் விலை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விலை போனதாகவும், நேற்று நடந்த திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் சுமார் ரூ.1¼ கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகி இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
நேற்று கட்டுக்கடங்காத கூட்டத்தால் இ்டநெருக்கடி ஏற்பட்டது. இதனால் வரும் காலங்களில் நகராட்சி நிர்வாகம் ஆட்டுச்சந்தையை விரிவாக்கம் செய்யவேண்டும் என வியாபாரிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story