தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 30 April 2022 12:18 AM IST (Updated: 30 April 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

ஆபத்தான மின்கம்பம்
கருங்கல் பேரூராட்சியில் 13-வது வார்டு பாலவிளை பத்ரேஸ்வரி அம்மன் கோவில் அருகில் மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து உள்ளது. இந்த மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் இருக்கிறது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.பிரேம்சிங், பாலவிளை.
கொடி அகற்றப்படுமா?
களியல்-நெட்டா  சாலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் செடி-கொடிகள் படர்ந்து உள்ளது. இதனால் பலத்த காற்று வீசினால் கூட செடி-கொடிகளாக இருப்பதால், அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மேலும் விபத்து நடக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி-கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும்.
- வில்சன், கடையல்.
சுகாதார சீர் கேடு
கண்ணனூர் ஊராட்சி உடப்புகுளம் முதல் புக்கோடு குளம் வரை மறுகால் ஓடை செல்கிறது. இந்த மறுகால் ஓடை அருகில்  ஆடு-மாடுகளை வெட்டுகிறார்கள். அவ்வாறு வெட்டப்படும் விலங்கின் கழுத்தில் இருந்து வடியும் ரத்தம் ஓடையில் விடப்படுகிறது. இந்த நீர் புக்கோடு குளம், சுரக்குளம், இவைகள் வழியாக பருத்தி வாய்க்காலில் கலக்கிறது.  இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு ஆடு, மாடு வெட்டுவதை தடுக்க வேண்டும். அல்லது ரத்தத்தை மறுகால் ஓடையில் விடுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அமிர்தையன், கண்ணனூர்.
நடவடிக்கை அவசியம்
திற்பரப்பு அருவியின் எதிர்புறம் நீச்சல் குளத்தை ஒட்டியுள்ள பகுதியில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு பெய்த மழையில் இரும்பு தடுப்பு சாய்ந்தது. சுமார் 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் சரி செய்யப்படவில்லை. ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் இடம். ஏதாவது அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் அங்கு தடுப்பை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமநாதன், திற்பரப்பு.
படிக்கட்டின் அவலநிலை
கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் சூரியோதயத்தை பார்த்து விட்டு கடலில் குளிப்பது வழக்கம். அவ்வாறு குளிப்பதற்காக திரிவேணி சங்கமத்துக்கு சென்று, அங்குள்ள படிக்கட்டில் காலை வைத்தாலே வழுக்கி கடலில் விழும் நிலை உள்ளது. எனவே திரிவேணி சங்கமத்தில் உள்ள படிகளை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுபாஷ், கன்னியாகுமரி.
மின் கம்பம் மாற்றப்படுமா?
சுசீந்திரத்தில் இருந்து மயிலாடி செல்லும் வழியில் வழுக்கம்பாறையில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. அதன் அருகில் உள்ள மின் கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கிறது. இதனால் விபத்து ஏற்படுவதற்கு முன் மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ் கண்ணா, வழுக்கம்பாறை.




Next Story