செல்லூர் பகுதியில் அளவிடும் பணி 4-வது நாளாக தொடர்கிறது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் வாடகை செலுத்தாத செல்லூர் பகுதியில் அளவிடும் பணி 4-வது நாளாக தொடர்கிறது. சுமார் 9 ஏக்கர் நிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் கோவில் லட்சக் கணக்கில் வருமானம் வர உள்ளது.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் வாடகை செலுத்தாத செல்லூர் பகுதியில் அளவிடும் பணி 4-வது நாளாக தொடர்கிறது. சுமார் 9 ஏக்கர் நிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் கோவில் லட்சக் கணக்கில் வருமானம் வர உள்ளது.
கோவில்
மதுரை வைகை வடகரையில் செல்லூர் பகுதியில் பழமை வாய்ந்த திருவாப்புடையவார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்தது. சிறப்பு வாய்ந்த இந்த கோவிலை சுற்றிலும் கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் உள்ளதாகவும், அதனை பலர் ஆக்கிர மிப்பு செய்து பல அடுக்குமாடி வீடுகள் கட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதிதாக வந்துள்ள தி.மு.க. அரசு கோவிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பாளர் களிடம் இருந்து மீட்டு மீண்டும் கோவில் வசம் கொண்டு வரவேண்டும் என்றும், மேலும் வாடகை பாக்கி, வாரிசு தாரர்கள் மாற்றம், மற்றவர்களுக்கு விற்பனை செய்த இடங் களையும் ஆய்வு செய்து அதனையும் கோவில் வசம் கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
1964-ம் ஆண்டு கணக்கெடுப்பு
அதைத்தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்யும் பணியும், வாடகை செலுத்தாத இடங்களை கண்டறியும் பணியும் தொடங்கியது.
அதன்படி செல்லூர் திருவாப்புடையார் கோவிலை சுற்றி உள்ள அனைத்து இடங்களும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. பலநூற்றாண்டுக்கு முன்பு அந்த இடத்தில் நந்தவனம் மற்றும் தோப்புகள் இருந்தாகவும். அதனை பல்வேறு சமூதாயத்தை சேர்ந்தவர்கள் பராமரித்து கோவிலுக்கு வாடகை, வரி கட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் காலபோக்கில் வைகை ஆற்றின் வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றங்களால் பல ஆண்டு களுக்கு முன்பு இங்கு இருந்தவர்கள் அந்த பகுதியை வேறு நபர்களுக்கு கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். அதன்பின்னர் அங்கிருந்து கோவிலுக்கு எவ்வித வாடகை, வரி போன்றவை எதுவும் வரவில்லை.
கோவில் நிர்வாகம் சார்பில் கடந்த 1964-ம் ஆண்டில் அந்த பகுதி முழுவதும் அளவீடு செய்து கணக்கெடுத்து யார், யார் அங்கு இருந்தார்கள். அவர்கள் எவ்வளவு கோவிலுக்கு வாடகை கொடுத்தார்கள் என்பது பற்றி தெளிவாக ரிஜிட்டர் மூலம் எழுதி வைக்கப்பட்டு உள்ளது.
தொடரும் அளவிடும் பணி
அதன் மூலம் தான் தற்போது செல்லூர், மீனாட்சி கல்லூரியில் இருந்து வைகை ஆற்றின் தென்கரை ஒட்டியும், திருவாப்புடையார் கோவிலை சுற்றியும் உள்ள நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் சுமார் 58 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் மீண்டும் கோவில் இடத்தை அளவீடு செய்து அதற்கு தரை வாடகை விதிக்க நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி கடந்த திங்கட்கிழமை முதல் தொடர்ந்து 4 நாட்களாக அந்த பகுதியில் இடத்தை அளவிடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் மூலம் சுமார் 9 ஏக்கர் நிலம் அங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பெரிய பெரிய வீடுகள், கல்யாண மண்டபம், ரைஸ் மில்கள் என பலவற்றை கட்டி வாடகை விட்டு உள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.
வாடகை
இந்த அளவிடு பணி முடிந்ததும் கோவில் நிர்வாகம் அதற்கு வாடகை நிர்ணயித்து வசூலிக்கப்படும். இதன் மூலம் பல லட்சம் ரூபாய் கோவிலுக்கு மாதம்தோறும் வருமானம் வரும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story