கோழிப்பண்ணையில் திடீர் தீ


கோழிப்பண்ணையில் திடீர் தீ
x
தினத்தந்தி 29 April 2022 7:03 PM GMT (Updated: 2022-04-30T00:33:44+05:30)

கோழிப்பண்ணையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

செக்கானூரணி, 
செக்கானூரணி அருகே பன்னியான் பிரிவு சிவதானபுரம் என்ற இடத்தில் மாயழகன் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த கோழி பண்ணையில் 2 கூரை அமைக்கப்பட்டு 4500-க்கும் மேற்பட்ட கோழிக் குஞ்சுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் அதிக மின் அழுத்தம் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு நேற்றுமுன்தினம் திடீரென தீ பிடித்து மளமளவென்று எரிந்தது. இதுகுறித்து சோழ வந்தான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தீயில் 100-க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் இறந்தன. இதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், கறிக்கோழி வளர்ப்பு நல வாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Next Story