ராஜாக்கமங்கலம் அருகே 6 வயது சிறுவன் திடீர் சாவு


ராஜாக்கமங்கலம் அருகே 6 வயது சிறுவன் திடீர் சாவு
x
தினத்தந்தி 30 April 2022 12:38 AM IST (Updated: 30 April 2022 12:38 AM IST)
t-max-icont-min-icon

ராஜாக்கமங்கலம் அருகே 6 வயது சிறுவன் திடீரென இறந்தார்.

ராஜாக்கமங்கலம், 
ராஜாக்கமங்கலம் அருகே 6 வயது சிறுவன் திடீரென இறந்தார்.
திடீர் சாவு
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அண்ணா காலனி பகுதியை சேர்ந்த ஜவகர், இசக்கியம்மாள் தம்பதி மகன் அர்ஜூன் (வயது 6). ஜவகர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்ததால் இசக்கியம்மாள் 2-வது திருமணம் செய்து கொண்டு வெள்ளிச்சந்தை பகுதியில் வசித்து வந்தார். இந்தநிலையில் அர்ஜுனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவனை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் ராஜாக்கமங்கலம் அண்ணா காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சிறுவன் அழைத்து செல்லப்பட்டான். அந்த சமயத்தில் மீண்டும் சிறுவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தான்.
இதனை தொடர்ந்து ராஜாக்கமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story